பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு நாள்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு நாள் விழா வெள்ளி, சனி 2  நாள்கள் நடைபெற்றது.   

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச எழுத்தறிவு நாள் விழா வெள்ளி, சனி 2  நாள்கள் நடைபெற்றது.   
கல்லூரித் தாளாளர் எஸ்.டி.எஸ். செல்வம் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வீ. முத்துவேலு முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை துணை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்து கொண்டு ரோபோக்கள், பழங்கால கார்கள்,  நவீன கட்டுமானப் பொருள்கள் ஆகியன இடம்பெற்றிருந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.  விழாவையொட்டி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மன்னார்குடி ஆகிய கல்வி மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 420 மாணவ, மாணவிகள் பங்கேற்ற வினாடி-வினா, ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கும், சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கும்  பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி  அலுவலர் (பொ) ஆர். ஜெயபால் பரிசு வழங்கிப் பாராட்டினார். 
2-வது நாள் சனிக்கிழமை நடைபெற்ற மண்டல அளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான  தொழில் நுட்பக் கட்டுரை விளக்கப் போட்டியில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 220 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இவர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
வெள்ளி,  சனி 2 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியை மாணவர்கள் தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 15,000 பேர் பார்வையிட்டனர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பேசும் ரோபோ, இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஜீப் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com