பேராவூரணியில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், குறுவட்ட அளவிலான தடகள மற்றும்

பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், குறுவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. 
பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ரா. ஜெயபால் தலைமை வகித்தார். எம்எல்ஏ மா. கோவிந்தராசு ஒலிம்பிக் கொடியேற்றி வைத்து, விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். காவல்துறை உதவி ஆய்வாளர் இல. அருள்குமார் அணி வகுப்பு மரியாதை ஏற்றார். 
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், தடை தாண்டுதல், ஈட்டி, குண்டு, வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில், 16 பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
ஆண்கள் பிரிவில் 100.5 புள்ளிகளுடன் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 87.5 புள்ளிகளுடன் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும், 31 புள்ளிகளுடன் செங்கமங்கலம் அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. 
பெண்கள் பிரிவில் 132 புள்ளிகளுடன் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 120 புள்ளிகளுடன் பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், 50 புள்ளிகளுடன் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றன. 
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.ஏ.டி.சுந்தரராஜன், பொருளாளர் ஆர்.பி. ராஜேந்திரன், துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, முதுகலை ஆசிரியர் கே. சற்குணம், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளி  தலைமையாசிரியர் வீ. மனோகரன், செங்கமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம். கணேசன், உதவித் தலைமை ஆசிரியர் கே. சோழபாண்டியன், ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் குமாரவேல், பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ஏ. கருணாநிதி வரவேற்றார்.  உடற்கல்வி ஆசிரியர் மா. சோலை நன்றி கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com