வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை ஏலம் விட முடிவு

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், பட்டுக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்திருப்பது:
போக்குவரத்துத் துறையில் வரி கட்டாத, இதர குற்றங்களுக்காகப் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைபிடிக்கப்பட்டு, வாகன உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களால் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல், தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பட்டுக்கோட்டை பகுதி அலுவலகத்தில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கைப்படி பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் செப். 16ஆம் தேதிக்கு பின்னர் எடுக்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர், தஞ்சாவூர் என்ற பெயரில் தஞ்சாவூரில் செலுத்தத்தக்கதாக வரைவோலை எடுத்து அக். 15ஆம் தேதிக்குள் தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் அளிக்க வேண்டும். டேவணித் தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர். ஏலத் தேதி டேவணித் தொகை செலுத்துபவர்களுக்குத் தனியே தெரிவிக்கப்படும்.
தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் மொத்தம் 40 வாகனங்களும், பட்டுக்கோட்டை பகுதி அலுவலகத்தில் 10 வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அலுவலக வேலை நாட்களில் செப். 16ஆம் தேதி பகல் 11 மணி முதல் அக். 15-ம் தேதி மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com