பிள்ளையார்பட்டியில் குடிநீர் வராததால் மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் ஒரு வாரமாகக் குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் ஒரு வாரமாகக் குடிநீர் வராததால் அதிருப்தியடைந்த மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிள்ளையார்பட்டியில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுது காரணமாக இப்பகுதிக்கு ஒரு வாரமாகக் குடிநீர் விநியோகம் இல்லை.
இதனால், அருகேயுள்ள விவசாயக் கிணற்றிலிருந்து குடிநீர் பிடித்து வருகின்றனர். மேலும், தனியாரிடமும் அதிக விலை கொடுத்து குடிநீரை வாங்குகின்றனர். 
இதுகுறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் புகார் செய்யப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை முதன்மைச் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50-க்கும் அதிகமானோர் காலிக் குடங்களுடன் சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
தகவலறிந்த போலீஸார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com