பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தஞ்சாவூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மா வட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி மா வட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை சனிக்கிழமை தொடக்கி வைத்தார். முன்னதாக நெகிழி ஒழிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
பேரணியைத் தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:- மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை  இயக்கம் சார்பில் 11.09.2019 முதல் 24.10.2019 வரை பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு முறை உபயோகப்படுத்தும் நெகிழி சேகரம் செய்யப்பட்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2 முதல் மத்திய அரசால்  முழுமையாகத் தடை செய்யப்படவுள்ளது. சேகரம் செய்யப்படும் நெகிழிகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை தார்ச்சாலை அமைத்தல் போன்ற பணிகளுக்கும்,  
மறுசுழற்சி செய்ய முடியாதவற்றை டம்பிங் முறையில் புதைத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேரணியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் பழனி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜ்குமார் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com