பூதலூர் ஒன்றிய பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து பூதலூர் ஒன்றிய விவசாயப் பாசனத்துக்காக மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை சனிக்கிழமை திறப்பைத் தொடங்கி வைத்தார்


தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகேயுள்ள உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து பூதலூர் ஒன்றிய விவசாயப் பாசனத்துக்காக மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை சனிக்கிழமை திறப்பைத் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 17 ஏரிகளில் விவசாயப் பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உய்யகொண்டான் முதல் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 12 ஏரிகளுக்கும், இரண்டாம் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 3 ஏரிகளுக்கும், மூன்றாம் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து 2 ஏரிகளுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2,355 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி சிறந்த முறையில் சாகுபடி செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில் திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டச் செயற் பொறியாளர் பாஸ்கர், உதவி செயற் பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர்கள் திருமாறன், ராஜரத்தினம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர், குடிமராமத்து திட்டத்தின் கீழ், புதுக்குடி ஊராட்சிக்குட்பட்ட அய்யாதிடல் ஊராட்சி குளம், செங்கிப்பட்டி ஊராட்சி அய்யனார் கோவில் குளம் ஆகியவற்றில் தலா ரூ. 1 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணியை ஆட்சியர் பார்வையிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com