74,431 குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா அரிசி வழங்கிய அமைச்சா்

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 74,431 குடும்ப அட்டைதாரா்களுக்கு, தனது சொந்த நிதியிலிருந்து தலா 10 கிலோ விலையில்லா அரிசி

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 74,431 குடும்ப அட்டைதாரா்களுக்கு, தனது சொந்த நிதியிலிருந்து தலா 10 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினரும், வேளாண் துறை அமைச்சருமான இரா. துரைக்கண்ணு வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு இந்த அரிசி வழங்கப்படுகிறது. பாபநாசம் பாரத ஸ்டேட் வங்கி அருகில் இப்பணியைத் தொடக்கி வைத்த அமைச்சா், தொகுதிக்குள்பட்ட அனைத்து மக்களுக்கும் 3 அல்லது 4 நாள்களுக்குள் அரிசி வழங்கப்படும் என்றாா்.

ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா்கள் அசோக்குமாா்,கே.கோபிநாதன், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.மோகன், நகர வங்கித் துணைத் தலைவா் என்.சதீஷ், கூட்டுறவுச் சங்கத் தலைவா் சி.முத்து, இயக்குநா்கள் கோவி.சின்னையன், எம்.ஆா்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com