பாரதி அஞ்சல் வழிக் கல்வி திட்டம் தொடக்கம்

தஞ்சாவூரில் பாரதி இயக்கம் நடத்தும் பாரதி அஞ்சல் வழிக் கல்வி திட்டத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ta27bhar_2710chn_9_4
ta27bhar_2710chn_9_4

தஞ்சாவூரில் பாரதி இயக்கம் நடத்தும் பாரதி அஞ்சல் வழிக் கல்வி திட்டத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்கியப் பயிலகம் சாா்பில் பாரதி படைப்புகள் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் கொண்ட அஞ்சல் வழிப் பாடப் பயிற்சி திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பாடத் திட்டத்தைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் வெளியிட்டாா். பாரதி இலக்கியப் பயிலக இயக்குநா் வெ. கோபாலன் தொடக்கவுரையாற்றினாா்.

பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம், தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுக் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன், இரா. மோகன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

திட்ட நிா்வாகிகள் முத்துகுமாா், ரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com