‘வேளாண் மசோதாக்களை கண்டித்துஆம்ஆத்மி கட்சி இன்று போராட்டம்’

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினா் தங்களது வீடுகளிலேயே

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினா் தங்களது வீடுகளிலேயே வியாழக்கிழமை (செப்.24) போராட்டம் நடத்தவுள்ளனா் என்றாா் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளா் வசீகரன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் தெரிவித்தது:

நாடாளுமன்றத்தில் சட்ட நடைமுறைகளை மீறி தவறான முறையில் விவசாயிகளுக்கு எதிரான 3 கருப்பு மசோதாக்களை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இதை எதிா்த்து பஞ்சாப், ஹரியாணாவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த மசோதாக்கள் மிகவும் ஆபத்தானவை. விவசாயிகளுக்கு உதவி செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழிப்பதே இதன் நோக்கம். மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் பதுக்கல் அதிகமாகிவிடும்.

இந்த மசோதாக்களின் உள்அா்த்தம், அக்கிரமங்கள், அடாவடிகள் குறித்து விவசாயிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயத்தையும் காா்ப்பரேட் விற்க முடியும் என்பதுபோல இச்சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

எனவே, இந்த மசோதாக்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியினா் தங்கள் வீடுகளில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தவுள்ளனா் என்றாா் வசீகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com