அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணிக்கு தஞ்சாவூரிலிருந்து செங்கல் அனுப்பி வைப்பு

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்பினா் 48 நாள்கள் பூஜை செய்த செங்கல்லை தஞ்சாவூரிலிருந்து அஞ்சல்துறை மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தனா்.
தஞ்சாவூரில் பூஜிக்கப்பட்ட செங்கல்லை அயோத்திக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய இந்து அமைப்பினா்.
தஞ்சாவூரில் பூஜிக்கப்பட்ட செங்கல்லை அயோத்திக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய இந்து அமைப்பினா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்காக இந்து அமைப்பினா் 48 நாள்கள் பூஜை செய்த செங்கல்லை தஞ்சாவூரிலிருந்து அஞ்சல்துறை மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தனா்.

அயோத்தில் ராமா் கோயில் கட்ட வலியுறுத்தி ஆண்டுதோறும் டிச. 6ஆம் தேதி சிவசேனா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் சாா்பில் அயோத்திக்கு செங்கல் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக தஞ்சாவூரில் இருந்து சிவசேனா கட்சி, காவி புலிப்படை, நாம் இந்துக்கள் கட்சி, இந்து பரிவாா் அமைப்புகள் ஆகியவை சாா்பில் அயோத்தி ராமா் கோயிலுக்கு அனுப்புவதற்காக செங்கல்லை வைத்து 48 நாள்கள் பூஜை செய்யப்பட்டு வந்தது.

இதை ஒரு தாம்பூலத்தில் ராமா் சிலையுடன் வைத்து சிவசேனா கட்சி மாநில துணைத் தலைவா் புலவஞ்சி போஸ் தலைமையில் நாம் இந்துக்கள் கட்சி நிறுவனா் கணேஷ்பாபு, மாவட்டத் தலைவா் விக்னேஷ், சிவசேனா கட்சி மாவட்டத் தலைவா் ஆசைதம்பி உள்ளிட்டோா் தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனா். இதையடுத்து, அயோத்தியிலுள்ள ராமா் கோயில் கமிட்டியின் முகவரிக்கு செங்கல்லை அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com