ஏடிஎம்களில் நூதன திருட்டு: காவல் துறையினா் விசாரணை

தஞ்சாவூரில் ஏடிஎம்களில் நூதன முறையில் திருடும் நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூரில் ஏடிஎம்களில் நூதன முறையில் திருடும் நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையைச் சோ்ந்த பொறியாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் அண்மையில் 4 முறை மொத்தம் ரூ. 40,000 ரொக்கம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு தகவல்கள் வந்தன.

இதையறிந்த அவா் வங்கிக்குச் சென்று கேட்டபோது உரிய பதில் இல்லை. பின்னா், இவா் தனது ஏடிஎம் அட்டையின் செயல்பாட்டை ரத்து செய்தாா். இதேபோல, பொதுப் பணித் துறைக் கண்காணிப்பாளரின் வங்கிக் கணக்கிலிருந்தும், ரூ. 30,000-ம், வங்கி மேலாளா் கணக்கிலிருந்து ரூ. 50,000-ம் என மொத்தம் 6 பேரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 2.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் அண்மையில் புகாா் செய்தனா். இதன் பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com