108 நாள்களுக்குப் பின் 60 அடியைத் தாண்டிய பாபநாசம் அணை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5.7 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 12 அடியும் உயர்ந்தது.
பாபநாசம் அணை
பாபநாசம் அணை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5.7 அடியும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 12 அடியும் உயர்ந்தது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் நீர்மட்டம் ஏப். 16இல் 60.45 அடியாக இருந்த நிலையில் 108 நாள்களுக்குப் பின் மீண்டும் 60 அடியைத் தாண்டியுள்ளது. திங்கள்கிழமை 61.90 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் 5.7 அடி உயர்ந்து செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி 67.60 அடியாக உயர்ந்தது. 

அணையில் நீர்வரத்து 4076.62 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 454.75 கன அடியாகவும் இருந்தது. 77.03 அடியாக இருந்த சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 11.8 அடி உயர்ந்து 88.84 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 62.15 அடியாகவும் நீர்வரத்து 48 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 55 கன அடியாகவும் இருந்தது. 52.50 அடியாக உள்ள கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 15 அடியாகவும் நீர்வரத்து 100 கன அடியாகவும் இருந்தது. 42 அடியாக இருந்த கடனாநதி அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 51.5 அடியாக உயர்ந்தது. 

நீர்வரத்து 391 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. 59 அடியாக இருந்த ராமநதி அணையில் நீர்மட்டம் 7.5 அடி உயர்ந்து 66.50 அடியானது. அணையில் நீர்வரத்து 215.60 கன அடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து 40.68 அடியாகவும் நீர்வரத்து 150 கன அடியாகவும் இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து அணைக்கு வரும் 49 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 132.22 அடி நீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 91 அடியாகவும் நீர்வரத்து 197 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மழையளவு: பாபநாசம் 33 மி.மீ., சேர்வலாறு 18 மி.மீ., மணிமுத்தாறு 4.8 மி.மீ., கொடுமுடியாறு 50 மி.மீ., ராதாபுரம் 3 மி.மீ. தென்காசி மாவட்டத்தில் மழையளவு : கடனாநதி 18 மி.மீ., ராமநதி 18 மி.மீ., கருப்பா நதி 48 மி.மீ., குண்டாறு 52 மி.மீ., அடவிநயினார் 48 மி.மீ., தென்காசி 5.6 மி.மீ., செங்கோட்டை 22 மி.மீ., ஆய்குடி 7.2 மி.மீ., சங்கரன் கோயில் 1 மி.மீ. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேலும் தற்போது பாபநாசம் அணையில் 60 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் உடனடியாக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com