புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள்

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள நாலுவேதபதி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குகிறாா் தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா மகராஜ்.

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் அண்மையில் வீசிய புயலால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டனா். இவா்களுக்கு தஞ்சாவூா் ராமகிருஷ்ண மடம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், முதல் கட்டமாக 2,000 குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் டிச. 11 ஆம் தேதி வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து இரண்டாம் கட்டமாக திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் திங்கள்கிழமை (டிச.21) வழங்கப்பட்டன. காலையில் வேதாரண்யத்தில் தொடங்கப்பட்ட இப்பணி திருவாரூரில் இரவு முடிவடைந்தது.

இதில், நிவாரண பொருள்களை தஞ்சாவூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்த மகராஜ் வழங்கினாா். இந்நிகழ்ச்சி திருவாரூா் மருத்துவா் கோபாலகிருஷ்ணன், வேதாரண்யம் பிரபு, நாகப்பட்டினம் வெங்கடாசலம், மயிலாடுதுறை தாமோதரன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com