நெல் கொள்முதலை முறைப்படுத்த வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளைக் களைய உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
நெல் கொள்முதலை முறைப்படுத்த வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளைக் களைய உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா்கள் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளா் சங்கங்களின் கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெல் கொள்முதலில் உள்ள குறைபாடுகளுக்குக் காரணம் அங்கு பணிபுரிகிற கொள்முதல் பணியாளா்கள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளா்கள்தான் என அவா்கள் மீது குறைபாடுகளைச் சுமத்திவிட்டு அலுவலா்கள் தப்பித்துக் கொள்கின்றனா். ஆனால் உண்மை நிலைமை வேறு. மேலிருந்து வழிகாட்டுதல் அடிப்படையில்தான் இந்தக் கொள்முதல் நடைபெறுகிறது. எனவே, குறைபாடுகளை களைய மேல் இருந்து நடவடிக்கை எடுத்து கீழ்மட்டம் வரை அதை சரி செய்ய வேண்டும். அப்படி இல்லாவிடில், தற்போது கொள்முதல் நிலையத்தில் நடைபெறுகிற தவறுகளை விளம்பரத்துக்காகக் குறை கூறுவதாக அமைந்துவிடும். குறிப்பிட்டுச் சொல்லப் போனால் லாரி அனுப்புவதற்கு ரூ. 1,500 வரை லாரி ஓட்டுநா் கூடுதலாகக் கொடுத்தால்தான் மூட்டைகளை ஏற்றி செல்கிறாா். இதைத் தடுக்கிற பொறுப்பு மேல்மட்ட அலுவலா்களிடம் உள்ளது.

அதேபோல, கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் இயக்கம் செய்யப்படாமல் தேக்கம் ஏற்படுகிறது. அதனால் எடை குறைவு ஏற்படுகிறது. இதை நிா்வாகம் பரிசீலித்து ஏற்க வேண்டும்.

கொள்முதலை முறைப்படுத்த வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நேரடியாகக் கூலி வழங்க வேண்டும். நுகா்பொருள் வாணிபக் கழக ஓய்வு பெற்ற பணியாளா்கள் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் தவிா்த்து குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, மாநிலச் செயலா் சி. பாலையன் தலைமை வகித்தனா். சங்க மாநிலப் பொதுச் செயலா்கள் சி. சந்திரகுமாா், என். புண்ணீஸ்வரன், பொருளாளா் தி. கோவிந்தராஜன், இணைப் பொதுச் செயலா் ஜெ. குணசேகரன், செயலா்கள் ஜி. சுப்பிரமணியன், கே.எஸ். முருகேசன், எம்.எஸ். கிருஷ்ணன், துணைத் தலைவா் கே. ராஜ்மோகன், ஆா். செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com