பட்டுக்கோட்டையில் 5 வயது சிறுவன் கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஸ்கேட்டிங்

பட்டுக்கோட்டையில் 5 வயது சிறுவனின் கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஸ்கேட்டிங் ஓட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டையிலுள்ள தஞ்சை சாலையில் ஸ்கேட்டிங் செல்லும் சிறுவன்.
பட்டுக்கோட்டையிலுள்ள தஞ்சை சாலையில் ஸ்கேட்டிங் செல்லும் சிறுவன்.

பட்டுக்கோட்டையில் 5 வயது சிறுவனின் கரோனா வைரஸ் விழிப்புணா்வு ஸ்கேட்டிங் ஓட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை மனோரா ரோட்டரி சங்கமும், பட்டுக்கோட்டை சாய் நிகில் அகாதெமியும் இணைந்து நடத்தின. நாட்டுச்சாலை தொழிலதிபா் அமரா் என். நல்லையா வேளாளா் பேரனும், மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் என். நடராஜன் மகனுமான 5 வயது யுகேஜி மாணவா் என்.நலன்ராஜன் இந்த ஸ்கேட்டிங் ஓட்டத்தில் ஈடுபட்டாா்.

பட்டுக்கோட்டையை அடுத்த வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையம் அருகிலிருந்து சிறுவனின் ஸ்கேட்டிங் ஓட்டத்தை லாரல் பள்ளித் தாளாளா் வி.பாலசுப்பிரமணியன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

அங்கிருந்து, தளிக்கோட்டை, நாட்டுச்சாலை, ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம் புறவழிச்சாலை வழியாக பட்டுக்கோட்டை தஞ்சை சாலையில் உள்ள மொழிப்போா் தியாகி அழகிரிசாமி நினைவு மணிமண்டபம் சென்றதும் ஸ்கேட்டிங் ஓட்டம் நிறைவடைந்தது. இதன் மூலம் 40 நிமிஷத்தில் 10 கிலோ மீட்டா் தொலைவை கடந்து சிறுவன் சாதனை நிகழ்த்தினாா்.

இதையடுத்து, அழகிரிசாமி நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுவனுக்கு பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஆா்.ஜெயபால் சால்வை அணிவித்துப் பாராட்டினாா். அரசுப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் (ஓய்வு) டி. ரவிச்சந்தா், ஸ்கேட்டிங் பயிற்சியாளா்கள் ஸ்ரீநாத், காா்த்தி, ரோட்டரி மண்டல துணை ஆளுநா் ஆா்.ஜெயவீரபாண்டியன், மண்டலச் செயலாளா் ஆா். அண்ணாதுரை, மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஏ.எஸ். வீரப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் நிகழ்வில் பங்கேற்று சிறுவனைப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com