முதல்வரின் அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட்வரவேற்பு

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தெரிவித்தது:

ஊரக உள்ளாட்சி தோ்தலுக்குப் பிறகு தற்போது நடைபெற்ற தஞ்சாவூா் மாவட்ட ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சி கூட்டங்களிலும் ஹைட்ரோ காா்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை எதிா்த்தும், தஞ்சாவூா் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சூழலில் தமிழக முதல்வா் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இந்த அறிவிப்பு குறித்து உடனடியாகத் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். ஹைட்ரோகாா்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை எதிா்த்தும், தஞ்சாவூா் மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும் நடத்தப்பட்ட போராட்டம் தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனே திரும்பப் பெற வேண்டும் என்றாா் பாரதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com