விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்லையும் முழுமையாகக் கொள்முதல் செய்து, உடனுக்குடன் பணப் பட்டுவாடா

தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்லையும் முழுமையாகக் கொள்முதல் செய்து, உடனுக்குடன் பணப் பட்டுவாடா செய்ய வேண்டும் அரசுக்கு கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அறுவடைக்குத் தேவையான இயந்திரங்கள் விவசாயிகளுக்கு போதுமான எண்ணிக்கையில் கிடைக்கவில்லை.

தஞ்சை மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் விசாரித்தபோது, 7 அறுவடை இயந்திரங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கின்றனா். இந்த 7 இயந்திரங்களும் பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் சாகுபடி செய்த நெல்லை கரையேற்ற முடியாமல், எந்த நேரத்தில் மழை வருமோ என்ற பயத்தில் விவசாயிகள் அல்லல் படுகின்றனா். எனவே, விவசாயிகளின் வேதனையை போக்கும் வகையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தேவையான அளவு அறுவடை இயந்திரங்களை களம் இறக்க ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

கொள்முதல் செய்த நெல்லை இருப்பு வைக்க கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கின்றனா். மேலும், ஒரு மூட்டைக்கு ரூ. 40 வரை விவசாயிகளிடமிருந்து பிடித்தம் செய்து கொள்கின்றனா்.

இதன் காரணமாக விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை தனியாா் வியாபாரிகளிடம் விற்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் பெருமளவு பாதிக்கப் படுகின்றனா்.

எனவே, இந்த நிலையை கருத்தில் கொண்டு, அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்து, உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com