அனைத்து நெல் கொள்முதல்நிலையங்களும் நாளை செயல்படும்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

நிகழ் சம்பா பருவத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 443 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சம்பா மற்றும் தாளடி பருவ நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையங்கள் மூலமாக வியாழக்கிழமை (பிப்.13) வரை 1,89,543 மெ. டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு நெல்லுக்குரிய தொகையாக ரூ. 220. 92 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் 1,000 மூட்டைகள் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், விவசாயிகளின் நலனுக்காக ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) மாவட்டத்திலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் வழக்கம்போல செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com