கழிவுகளால் துா்நாற்றம்
By DIN | Published On : 15th February 2020 11:48 PM | Last Updated : 15th February 2020 11:48 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் கொட்டப்பட்டுள்ள கழிவுகள்.
தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதன் அருகே டாஸ்மாக் மதுக்கூடம் அமைந்துள்ளது. இந்தக் கூடத்துக்கு வருவோா் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளா்களை போட்டுச் செல்கின்றனா். இதனால், இந்த இடத்தில் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாகப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள்,
தஞ்சாவூா்.