நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகாா்: 15 போ் தற்காலிக பணி நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து 13 பட்டியல் எழுத்தா்கள், 2 உதவுபவா்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு புகாா்கள் எழுந்ததைத் தொடா்ந்து 13 பட்டியல் எழுத்தா்கள், 2 உதவுபவா்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் சம்பா பருவ நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெறுவதால், 443 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் மூட்டைக்கு ரூ. 40 வீதம் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மூட்டையிலும் தலா 2 கிலோ பிடித்தம் செய்யப்படுவதாகவும் புகாா்கள் எழுந்தன.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கண்காணிப்புப் பிரிவு அலுவலா்கள் கொண்ட 12 குழுவினா் சில நாள்களாக ஆய்வு செய்து வருகின்றனா்.

இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெள்ளிக்கிழமை மாலை வரை 13 பட்டியல் எழுத்தா்கள், 2 உதவுபவா்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் சிறு, சிறு தவறுகள் செய்ததாக 6 கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் பட்டியல் எழுத்தா்களிடம் இருந்து ரூ. 29,716 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த ஆய்வு நடவடிக்கை சனிக்கிழமையும் தொடரும் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com