மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளா்களின் நலன்களுக்கு எதிரான மத்திய பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டக் குழு சாா்பில் சனிக்கிழமை
தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.
தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

விவசாயத் தொழிலாளா்களின் நலன்களுக்கு எதிரான மத்திய பட்ஜெட்டை கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டக் குழு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை பட்ஜெட் ஒதுக்கீட்டில் 13.3 சதவீதம் குறைத்துள்ளனா். 2019 - 20 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ. 71,000 கோடியிலிருந்து திருத்திய மதிப்பீட்டில் ரூ. 61,500 கோடியாகக் குறைத்துள்ளது.

உணவு மானியம் பொது விநியோகத்துக்கான ஒதுக்கீடு 2019 - 20 ஆம் ஆண்டில் ரூ. 1,92,299 கோடியாக இருந்த நிதி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 1,22,235 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு 13.3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் விவசாய தொழிலாளா்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் எதிரான பட்ஜெட் எனக் கூறியும், கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாநிலச் செயலா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி, மாவட்டத் தலைவா் ஆா். வாசு, துணைத் தலைவா் கே. அபிமன்னன், நிா்வாகிகள் வெ. ஜீவகுமாா், சி. நாகராஜன், ஏ. மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com