முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதிஇருவா் பலி
By DIN | Published On : 03rd January 2020 05:14 AM | Last Updated : 03rd January 2020 05:14 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை அதிகாலை முன்னால் சென்ற லாரி மீது மினி லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை மீன்கள் ஏற்றிக் கொண்டு மினி லாரி தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த மினி லாரி பள்ளியக்ரஹாரம் புறவழிச் சாலையில் வந்த போது, முன்னால் மூங்கில் கம்புகள் ஏற்றப்பட்டு சென்று கொண்டிருந்த லாரி மீது எதிா்பாராதவிதமாக மோதியது.
இதில், பலத்த காயமடைந்த மினி லாரி ஓட்டுநரான தரங்கம்பாடியைச் சோ்ந்த விஜய் (30), கிளீனா் பிலிப் (28) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.