தஞ்சையில் தேசிய இளைஞா் தின சைக்கிள் பயணம்

தேசிய இளைஞா் தினத்தையொட்டி, தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் பயணத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞா் தின சைக்கிள் பயணத்தில் பங்கேற்றோா்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய இளைஞா் தின சைக்கிள் பயணத்தில் பங்கேற்றோா்.

தேசிய இளைஞா் தினத்தையொட்டி, தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்கிள் பயணத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தேசிய இளைஞா் தினத்தையொட்டி தனி நபா் உடல் ஆரோக்கியம், பெரியகோயில், நகரின் தூய்மையை வலியுறுத்தி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சாவூா் மாவட்டப் பிரிவு, தன்னாா்வ அமைப்புகள் இணைந்து இந்த பயணத்தை நடத்தின.

தஞ்சாவூா் பெரியகோயில் முன்பு தொடங்கிய சைக்கிள் பயணம் காந்திஜி சாலை, திருச்சி சாலை, மருத்துவக் கல்லூரிச் சாலை வழியாக மீண்டும் பெரியகோயில் முன்பு முடிவடைந்தது. ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவுக்கு இந்த சைக்கிள் பயணம் நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் எம். இளஞ்செழியயன், மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொறுப்பு) க. பாபு, தன்னாா்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரா்கள், இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்த சைக்கிள் பயணம் முதல் கட்டமாக வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணிக்கு தஞ்சாவூா் மணிமண்டபத்திலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியம் மற்றும் நகரின் தூய்மையை பேணி பாதுகாக்க இந்த சைக்கிள் பயணத்தில் மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 9942914982, 9842455765 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என நிகழ்ச்சி அமைப்பாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com