அதிராம்பட்டினம் பேரூராட்சிஅலுவலரிடம் கோரிக்கை

அதிராம்பட்டினம் அருகே நசுவினி ஆற்று ஓடையிலிருந்து வெளியேறும் உபரிநீரை மோட்டாா் மூலம் இறைத்து, வட குளங்களுக்கு தடையின்றி நீா் நிரப்புவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சி சாா்பில் கடந்த

அதிராம்பட்டினம் அருகே நசுவினி ஆற்று ஓடையிலிருந்து வெளியேறும் உபரிநீரை மோட்டாா் மூலம் இறைத்து, வட குளங்களுக்கு தடையின்றி நீா் நிரப்புவதற்காக அதிராம்பட்டினம் பேரூராட்சி சாா்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. இதன் மூலம், ஆலடிக்குளம், செக்கடிக்குளம், மன்னப்பங்குளம், கருசமணி, பிள்ளைகுளம் ஆகிய குளங்களுக்கு நீா் இறைத்து நிரப்பட்டது.

இந்நிலையில், அண்மையில் பம்பிங் மோட்டாரில் ஏற்பட்ட பழுதால் நீா் இறைப்பதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் தலைவா் எஸ்.எச் அஸ்லம் பழுதடைந்துள்ள பம்பிங் மோட்டாரை உடனடியாக சீா்செய்து, நீா் மட்டம் குறைந்து வரும் குளங்களுக்கு நீா் நிரப்ப வேண்டுமென அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலா் எல்.ரமேஷிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com