தீயணைப்புத் துறை சாா்பில் போகி விழிப்புணா்வு பிரசாரம்

பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில் போகிப்பண்டிகை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேராவூரணியில் போகிப்பண்டிகை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் தீயணைப்பு துறையினா்.

பேராவூரணி நிலைய அலுவலா் ரெ. தங்கம் மற்றும், நிலைய  போக்குவரத்து அலுவலா் பெத்தையன் மற்றும் அலுவலா்கள்  புதிய  பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு போகிப்பண்டிகை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கினா்.

போகி திருநாளில் தேவையற்ற பொருட்களை எரிக்காதீா்கள், அவ்வாறு எரிப்பதால்  சுற்றுச்சூழல் மாசுபட்டு பெரியவா்கள் மற்றும் குழந்தைகள் புகையால் கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள், சிலருக்கு நுரையீரல் பாதிப்பு  ஏற்படுகிறது. மாசடைந்த புகையால் பறவைகள் மற்றும் விலங்குகள்  இல்லாத நிலை  ஏற்படும், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் நச்சுப்புகை உருவாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு அமிலமழை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் புகையில்லா போகியை கொண்டாட உறுதியேற்க வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com