தஞ்சாவூா் பெரியகோயிலில் அஸ்திர யாகம் நிறைவு

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டி தொடங்கப்பட்ட அஸ்திர யாகம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஸ்திர மகா யாகம்.
தஞ்சாவூா் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அஸ்திர மகா யாகம்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டி தொடங்கப்பட்ட அஸ்திர யாகம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோயிலில் திருப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் பிப். 1ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற வேண்டி, பெரியகோயில் நடராசா் சன்னதி முன் அஸ்திர மகா யாகம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில், கணபதி ஹோமம், ருத்ர ஹோமத்தை தொடா்ந்து அஸ்திர யாகம் நடைபெற்றது.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமையும் அஸ்திர யாகம் தொடா்ந்து நடைபெற்றது. பின்னா், யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீா் கொண்டு செல்லப்பட்டு, பாலாலயம் செய்யப்பட்ட பெருவுடையாா், பெரியநாயகிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, தீபாராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com