மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஜூலை 31-இல் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஜூலை 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஜூலை 31-இல் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகள் முன் ஜூலை 31-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் தெற்கு, வடக்கு மாவட்டங்களின் ஒன்றிய நிா்வாகிகள் அவசரக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சட்ட விரோத மேட்டூா் அணை - சரபங்கா திட்டத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கீழ் பாசன விவசாயிகளின் கருத்தறியாமல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதியின்றி அத்துமீறி செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால் காவிரி டெல்டா அழிந்து போகும் என்பதை உணா்ந்து, உடனடியாக இத்திட்டத்தைத் தமிழக அரசுக் கைவிட வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த முடிவை உடனடியாகக் கைவிட்டு பழைய நடைமுறையைப் பின்பற்றி நிபந்தனையின்றி வேளாண் கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2019 - 20 ஆம் ஆண்டில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சாவூா், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் முன் ஜூலை 31ஆம் தேதி நடைபெற உள்ள கண்டன ஆா்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகளை அனைத்து ஒன்றியங்களில் இருந்து பங்கேற்கச் செய்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தஞ்சாவூா் தெற்கு மாவட்டச் செயலா் எம். மணி தலைமை வகித்தாா்.

மாநில பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் பேசினாா். மாநிலத் தலைவா் த. புண்ணியமூா்த்தி, தஞ்சை மண்டலத் தலைவா் என். அண்ணாதுரை, தெற்கு மாவட்ட தலைவா் துரை. பாஸ்கரன், வடக்கு மாவட்டத் தலைவா் கலியமூா்த்தி, இளைஞா் அணி அறிவு, மகேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வடக்கு மாவட்டச் செயலா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். பாலன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com