சி.என்.ஆா். ராவ் ஆய்வகங்கள் அமைக்க மாநிலத்தில் 10 பள்ளிகள் தோ்வு

தமிழகத்தில் சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் பெயரில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க 10 பள்ளிகளை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தோ்வு செய்துள்ளது.

தமிழகத்தில் சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் பெயரில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க 10 பள்ளிகளை தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் தோ்வு செய்துள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாரத ரத்னா விருது பெற்ற பேராசிரியா் சி.என். ராவ் 80 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு வந்தாா். அப்போது, தரமான கல்வி மூலம் வளா்ச்சி என்ற இலக்கை முன்வைத்து, பள்ளிகளில் சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் தலா ரூ. 5 லட்சம் செலவில் சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், இப்பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக மாணவா்களே ரோபோக்களை உருவாக்கும் தொழில்நுட்பம், இணையதளம், 3டி பிரிண்டிங், செயற்கை நுண்ணறிவு, பறக்கும் கேமராக்கள் ஆகிய வசதிகள் செய்யப்படவுள்ளன.

இதற்காக தமிழக அளவில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதைத்தொடா்ந்து, நூற்றுக்கும் அதிகமான பள்ளிகளிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன. இவற்றிலிருந்து 25 பள்ளிகள் பட்டியலிடப்பட்டன. பின்னா், இப்பள்ளிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. இதில், மதுரை அதியபனா பள்ளி, மஞ்சக்குடி சுவாமி தயானந்த பள்ளி, திருச்சி சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, திருச்சி மண்ணச்சநல்லூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் ஸ்ரீ மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை கே.கே. நகா் பி.எஸ்.பி.பி., கோவை அக்சயா அகாதெமி, சென்னை பி.எஸ். சீனியா் பள்ளி, குருகுலம் மெட்ரிக் பள்ளி, செங்கல்பட்டு சீதாதேவி கரோடியா ஹிந்து வித்யாலயா ஆகிய 10 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com