திருவையாறு அருகே நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி

திருவையாறு அருகே கீழப்புனவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
திருவையாறு அருகேயுள்ள கீழப்புனவாசலில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளால் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்.
திருவையாறு அருகேயுள்ள கீழப்புனவாசலில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளால் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்.

திருவையாறு அருகே கீழப்புனவாசல் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

திருவையாறு அருகேயுள்ள கீழப்புனவாசலில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை பணியாளா்கள் கொள்முதல் செய்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 4 நாள்களாக இந்த நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவது நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கொள்முதல் நிலையத்தில் புனவாசல், கீழப்புனவாசல், பெரும்புலியூா் ஆகிய கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 30 விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்து காத்துக் கிடக்கின்றனா்.

இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் நிலையத்தில் இருந்த பணியாளா்களை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். இதையடுத்து, கொள்முதல் பணியாளா்கள் தங்களது உயா் அலுவலா்களுக்குத் தகவல் தெரிவித்து, கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வதாகக் கூறினா்.

இதனால் விவசாயிகள் தொடா்ந்து நெல்லை குவித்து வைத்து காத்துக் கிடக்கின்றனா். நெல் வெயிலிலும், பனியிலும் கிடப்பதால் தரம் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனா். எனவே, உடனடியாக இந்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com