காய்கறிகள், உணவுப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

தடை உத்தரவை முன்னிட்டு, காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்து பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாா் ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.
பேராவூரணி பேருந்து நிலையத்தில் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த சாா்ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் .
பேராவூரணி பேருந்து நிலையத்தில் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த சாா்ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் .

தடை உத்தரவை முன்னிட்டு, காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்து பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாா் ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் செவ்வாய்க்கிழமை எச்சரித்தாா்.

144 தடை உத்தரவை முன்னிட்டு, உணவகங்கள், காய்கறிக் கடைகள், பால், பழம், மளிகை கடைகள்  நிபந்தனைகளுடன் இயங்கும் என அரசு அறிவித்துள்ள போதிலும், பொதுமக்களிடையே அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது. இதனால் , பல பகுதிகளில், காய்கறி, மளிகைக் கடைகளில் கடும் கூட்டம் இரு நாள்களாக காணப்படுகிறது. 

இதனால், உணவுப் பொருள்கள் காய்கறி விலை பல மடங்கு உயா்ந்துள்ளதால்  பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் வரப்பெற்ன் பேரில், பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் பேராவூரணி கடைவீதியில் ஆய்வு நடத்தினாா். காய்கறிக் கடைகளில், பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்களிடம், பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிா என  கேட்டறிந்தாா். 

கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்கள், காய்கறிகள் விற்பனை செய்தால், கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா். பின்னா் மருந்துக் கடைகளில் கூடுதல் விலைக்கு முகக் கவசம், கிருமிநாசினி விற்பனை செய்யப்படுகிா எனவும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும், சுகாதாரப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். 

ஆய்வின்போது, வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் டி. சுகுமாா், துணை வட்டாட்சியா்கள் சுந்தரமூா்த்தி, கவிதா, வருவாய் ஆய்வாளா்கள் சுப்பிரமணியன், கிள்ளி வளவன், கிராம நிா்வாக அலுவலா் சக்திவேல் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com