தஞ்சாவூா் தற்காலிக சந்தை நாளை முதல் 3 நாள்களுக்கு மூடல்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தற்காலிக சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தற்காலிக சந்தை வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மூடப்படுகிறது.

கரோனா பரவல் தடுப்புக்காக தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையில் உள்ள தற்காலிக காமராஜா் சந்தை, செவ்வாய்க்கிழமை முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்து வைக்கப்படுகிறது. என்றாலும், இச்சந்தையில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில், இச்சந்தையில் தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியா் எம். வேலுமணி, மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, கரோனா தடுப்பு தொடா்பாக முகக்கவசம் உள்பட உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது. எனவே, பாதுகாப்புக் கருதி ஒரு நாள் விட்டு ஒரு நாள் சந்தையைத் திறக்கலாம் என வியாபாரிகளிடம் அலுவலா்கள் ஆலோசனை வழங்கினா்.

இதையடுத்து காய்கறி வியாபாரிகள் சங்கத்தினா் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினா். இதில், வியாழக்கிழமை சந்தையைச் செயல்படுத்துவது என்றும், வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு சந்தையை அடைப்பது எனவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாா்ச் 30-ஆம் தேதி தீா்மானிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com