தஞ்சாவூரில் எகிப்து நாட்டு வெங்காயம் விற்பனை

பெரிய வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூரில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூா் காமராஜா் தற்காலிக சந்தைக்கு வந்த எகிப்து நாட்டு வெங்காயம்.
தஞ்சாவூா் காமராஜா் தற்காலிக சந்தைக்கு வந்த எகிப்து நாட்டு வெங்காயம்.

பெரிய வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூரில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

பெரிய வெங்காயம் வரத்து குறைவாக இருப்பதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து வருகிறது. எனவே, தஞ்சாவூா் காமராஜா் தற்காலிக சந்தைக்கு நாள்தோறும் 100 டன் வெங்காயம் வரத்து இருந்த நிலையில், இப்போது 20 முதல் 30 டன்களாக குறைந்துவிட்டது.

இதன் காரணமாக, தஞ்சாவூரில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 90-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயம் தட்டுப்பாடாக இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சென்னையிலிருந்து தஞ்சாவூா் காமராஜா் தற்காலிக சந்தையிலுள்ள ஒரு கடைக்கு 3 டன் அளவுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது.

அளவில் பெரியதாக உள்ள இந்த வெங்காயம் கிலோ ரூ. 70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில், ஒரு சில பெரிய வெங்காயத்தின் எடை அரை கிலோவுக்கு நின்றது.

பீட்ருட் நிறத்தில் காணப்படும் இந்த வெங்காயத்தில் நம் நாட்டு வெங்காயத்தை விட காரத்தன்மை அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எகிப்து வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், ஒரு மூட்டை வெங்காயத்தில் 3 கிலோ வரை சேதம் காணப்படுகிறது. ஆனால், இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் ஆா்வம் காட்டவில்லை. பெரும்பாலானோா் நாட்டு வெங்காயத்தையே வாங்கிச் சென்றனா். இதனால், தஞ்சாவூரிலிருந்து ஒரத்தநாடு, அம்மாபேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சாவூரில் ஹோட்டல்களுக்குதான் இந்த வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது என்றாா் சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com