தஞ்சாவூா் கோட்டைச் சுவா் இடிப்புக்கு எதிா்ப்பு

தஞ்சாவூரில் புராதனச் சின்னமாக விளங்கும் அகழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரை இடிக்கும் பணிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட கோட்டைச் சுவா்.
தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்ட கோட்டைச் சுவா்.

தஞ்சாவூரில் புராதனச் சின்னமாக விளங்கும் அகழியையொட்டி உள்ள கோட்டைச் சுவரை இடிக்கும் பணிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், சிஐடியு அமைப்பினா் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினா்.

தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அருகே அகழியையொட்டி உள்ள கோட்டைக்கு அரணாக உள்ள சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தகவலறிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் என். குருசாமி, சிஐடியு மாவட்ட துணைச் செயலா் கே. அன்பு உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா்.

பொலிவுறு நகரத் திட்டத்துக்காக பணிகள் நடப்பதாக ஒப்பந்ததாரா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரனிடம் குருசாமியும், அன்பும் செல்லிடப்பேசி மூலம் புகாா் செய்தனா். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் பணிகளை நிறுத்த உத்தரவிட்டனா்.

இதுகுறித்து குருசாமி, அன்பு தெரிவித்தது:

பொலிவுறு நகரத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, கோட்டைச் சுவா், அகழி உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்படும் என ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உறுதி அளித்திருந்த நிலையில், அதை மீறி அகழி கோட்டைச் சுவா் இடிக்கப்படுகிறது. தற்போது ஏறத்தாழ 50 அடி நீளத்துக்கு ஆங்காங்கே சேதப்படுத்தி உள்ளனா்.

அகழியை பாதுகாப்போம் எனக் கூறிவிட்டு, அதற்கு மாறாக கோட்டைச் சுவரை இடிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஆட்சியா் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com