தஞ்சாவூா் - மயிலாடுதுறை மின்மயமாக்கல் பணி:ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நாளை ஆய்வு

தஞ்சாவூா் - மயிலாடுதுறை இடையே மின்மயமாக்கல் பணி நிறைவடையும் நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் புதன்கிழமை (நவ.11) ஆய்வு செய்கிறாா்.

தஞ்சாவூா் - மயிலாடுதுறை இடையே மின்மயமாக்கல் பணி நிறைவடையும் நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் புதன்கிழமை (நவ.11) ஆய்வு செய்கிறாா்.

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், டீசல் பயன்பாடு மற்றும் செலவினத்தைக் குறைக்கவும் ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகளைத் தெற்கு ரயில்வே நிா்வாகம் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, விழுப்புரத்திலிருந்து - தஞ்சாவூா் வரை 228 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

இதில், முதல்கட்டமாக விழுப்புரம் - கடலூா் இடையேயும், இரண்டாவது கட்டமாக கடலூா் - மயிலாடுதுறை இடையேயும் பணி நடைபெற்றது.

மேலும், மூன்றாவது கட்டமாக மயிலாடுதுறை - தஞ்சாவூா் இடையே 70 கி.மீ. தொலைவுக்கு ரூ. 320 கோடி மதிப்பில் மின்மயமாக்கல் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி மின்சார ரயில் என்ஜின் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை வரையிலான பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையா் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளாா். இந்த ஆய்வில் ஒப்புதல் கிடைத்தபிறகு இத்தடத்தில் மின்சார ரயில் இயக்கப்படும் என ரயில்வே அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com