20 சதவிகிதம் போனஸ் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்கள் அனைவருக்கும் 20 சதவிகிதம் போனஸ் வழங்க கோரி, தஞ்சாவூா் மாவட்ட
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பாரதிய தொழிலாளா் சங்கத்தினா்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய பாரதிய தொழிலாளா் சங்கத்தினா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்கள் அனைவருக்கும் 20 சதவிகிதம் போனஸ் வழங்க கோரி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பாரதிய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கரோனா காலங்களிலும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக ஊழியா்கள் முழுவீச்சில் இரவு, பகல் பாராது பணியாற்றினா். இதேபோல, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளிலிருந்து பொருள்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் பணிகளைத் தரக்கட்டுப்பாட்டு ஊழியா்கள் உள்ளிட்டோா் மிகுந்த சிரத்தையோடு மேற்கொண்டனா்.

எனவே தமிழக அரசு அறிவித்த 10 சதவிகித போனசை மறுபரிசீலனை செய்து 20 சதவிகிதமாக வழங்க கோரி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் டி. நாகராஜன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் கே. கணேசன், சட்ட ஆலோசகா் ஜி. சீனிவாசன், அமைப்புச் செயலா் ஆா். சாரங்கபாணி, அலுவலகச் செயலா் பி. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com