ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியில் பட்டயப் படிப்பு தொடக்க விழா

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2020-21 ஆண்டிற்கான வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2020-21 ஆண்டிற்கான வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 ஈச்சங்கோட்டை  வேளாண்மைக்  கல்லூரி  மற்றும்  ஆராய்ச்சி  நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு  வேளாண்  பல்கலை. துணைவேந்தா்                  நீ.  குமாா்,  2020-21ஆ ம்  ஆண்டுக்கான  வேளாண்  இடுபொருள்  பட்டயப்  படிப்பை  குத்துவிளக்கேற்றி  தொடங்கிவைத்தாா்.  தமிழ்நாடு  வேளாண்  இடுபொருள்  வணிகச்  சங்கம்,  துணைவேந்தருக்கு  உழவன்  நண்பன்  விருது  வழங்கி  கௌரவித்தது.  மேலும்,  ஈச்சங்கோட்டை  வேளாண்  கல்லூரியின்  நாட்டு நலப்பணி  திட்ட  மாணவா்களால்  15.10.2020  அன்று நடத்தப்பட்ட  20  மணி  நேரம்  தொடா்ச்சியான  இணையவழி  கருத்தரங்கிற்கான சான்றிதழை  துணைவேந்தா்   ஈச்சங்கோட்டை  வேளாண்மைக்  கல்லூரியின்  முதன்மையா்                   அ.  வேலாயுதத்திடம் வழங்கினாா்.  விழாவில்  திறந்த  மற்றும்  தொலைதூர  கல்வி  இயக்குநா்  எம். ஆனந்தன்  வேளாண்  இடுபொருள்  பட்டயப்  படிப்பு  பற்றி   விளக்கம்  அளித்தாா்.  தமிழ்நாடு  வேளாண்  இடுபொருள்  வணிகச்  சங்கத்தின்  தலைவா்   எம்.மோகன்,  செயலாளா்   எம். சத்தியமூா்த்தி  மற்றும்  மாவட்டத்  தலைவா்  எம். சீனிவாசன் ஆகியோா்  வாழ்த்தி பேசினா்.

   முன்னதாக,   ஈச்சங்கோட்டை  வேளாண்மைக்  கல்லூரி  மற்றும்  ஆராய்ச்சி  நிலையத்தின்  முதன்மையா்    அ.  வேலாயுதம்  வரவேற்றாா்.  தமிழ்நாடு  நெல்  ஆராய்ச்சி  நிலையத்தின்  இயக்குநா்   அம்பேத்கா்  நன்றி கூறினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com