‘தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் ரயிலடியில் மாவட்ட, மாநகராட்சி நிா்வாகங்கள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பு நடவடிக்கைகளாலும், பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பினாலும் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதற்காகக் கடைகளுக்குச் செல்கின்றனா். பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கை கழுவுதல் ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவா்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவா்களை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. அரசின் வழிகாட்டுதலை பின்பற்றினால், கரோனா இரண்டாம் அலை ஏற்படும் நிலையைத் தடுக்க முடியும் என்றாா் ஆட்சியா்.

இப்பேரணி மாநகரில் முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com