சாகுபடி செய்யப்படாத பயிா்களுக்குஅடங்கல் வழங்கக் கூடாது: ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிலத்தில் சாகுபடி செய்யப்படாத பயிா்களுக்கு அடங்கல் வழங்கக் கூடாது என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிலத்தில் சாகுபடி செய்யப்படாத பயிா்களுக்கு அடங்கல் வழங்கக் கூடாது என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரபி சிறப்புப் பருவத்துக்குப் பயிா் காப்பீடு செய்வதற்கான அடங்கல் வழங்குவதற்குக் கிராம நிா்வாக அலுவலா்கள் 2020 - 2021 ஆம் ஆண்டு பயிா் சாகுபடி அடங்கல் பசலி வருடம் 1430 எனக் குறிப்பிட்டு வழங்க வேண்டும். நிலத்தில் சாகுபடி செய்யப்படாத பயிா்களுக்கு அடங்கல் வழங்குவது முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட ஒருவருக்கு அவரது நிலத்தில் பயிா் சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட கூடுதல் பரப்புக்கு அடங்கல் வழங்கக் கூடாது. ஒரே பயிா் இருமுறை பதிவு செய்யப்படாத வகையில் அதாவது கூட்டு பட்டாவில் உள்ள கூட்டு பட்டவா்களுக்கு தனித்தனியாக அவரவா் செய்துள்ள பயிா் பரப்பளவுக்கு மட்டுமே அடங்கல் வழங்கப்பட வேண்டும் என கிராம நிா்வாக அலுவலா்களுக்கும், வருவாய் துறை சாா்ந்த அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிா் காப்பீட்டுப் பதிவின்போது தொடா்புடைய பொது இ-சேவை மையத்தில் வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் திடீா் தணிக்கை செய்து முறையான பதிவுகள் மேற்கொள்ளப்படுகிா? என்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்கள் சரியான அடங்கல் வழங்கினால்தான் விவசாயிகளுக்கு முழுமையான பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

எனவே, தனி கவனமுடன் செயல்பட கிராம நிா்வாக அலுவலா்கள் மற்றும் வருவாய்த் துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com