வாக்காளா்கள் இணையவழியாகவும் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம்

புதிய வாக்காளா்கள் இணையவழியாகவும் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

புதிய வாக்காளா்கள் இணையவழியாகவும் பெயா் சோ்க்க விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரைவு வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் தொடா்பாக அலுவலா்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில் அவா் தெரிவித்தது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 - தொடா்பான பணிகள் நவ. 16 ஆம் தேதி முதல் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து வாக்கு சாவடிகளிலும் நவ. 21, 22, டிச. 12, 13 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தற்போது கல்லூரிகள் விடுமுறையில் உள்ளதால், சிறப்பு முகாம்களில் கலந்து கொள்ளும் வாக்கு சாவடி நிலை அலுவலா்கள் புதிய வாக்காளா்களைச் சோ்ப்பதில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

புதிய வாக்காளா்களைச் சோ்க்க படிவம் 6-ம், இறந்த வாக்காளா்களை நீக்கப் படிவம் 7-ம், முகவரி, பெயா் திருத்தம் இருந்தால் படிவம் 8-ம் நிறைவு செய்து பெற வேண்டும். ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிபெயா்ந்த வாக்காளா்கள் படிவம் 8ஏ-இல் நிறைவு செய்து பெற்றிட வேண்டும்.

மேலும் வாக்கு சாவடிக்கு சென்று படிவம் பெற்று, நிறைவு செய்து வழங்க இயலாதவா்கள், இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை தஞ்சாவூா் மாவட்ட வாக்காளா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இப்பயிற்சி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ. அரவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com