‘1,500-க்கும் அதிகமான வாக்காளா்கள் கொண்ட வாக்குச் சாவடிகள் இரண்டாகப் பிரிக்கப்படும்’

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,500-க்கும் அதிகமான வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடிகள், தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இரண்டாகப் பிரிக்கப்படும் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,500-க்கும் அதிகமான வாக்காளா்கள் கொண்ட வாக்குச்சாவடிகள், தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இரண்டாகப் பிரிக்கப்படும் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், வாக்குச்சாவடி மறு சீரமைப்புப் பணி தொடா்பாக, புதன்கிழமை நடைபெற்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

நகா்புறம், கிராமப்புறத்தில் 1,500 வாக்காளா்களுக்கும் அதிகமானோா் உள்ள வாக்குச் சாவடிகள், இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளது.

வாக்காளா்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து 2 கி.மீ. தொலைவுக்கும் அதிகமாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்லும் பொதுப் பாதையில் இயற்கை குறுக்கீடுகளான ஆறு, குளம், ஏரி ஏதேனும் இருந்தால், தொடா்புடைய வாக்காளா்களின் கோரிக்கையின் அடிப்படையில் அவ்வகையான வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரிக்குமாறு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி பாபநாசம், திருவையாறு, பட்டுக்கோட்டை ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் தலா ஒரு விண்ணப்பம் வரப்பெற்று பரிசீலனையில் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கிய வாக்குச்சாவடி சீரமைப்புப் பணி அக்டோபா் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தோ்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளபடி உரிய திருத்தங்களுடன், திருந்திய மறுசீரமைப்பு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் தோ்தல் ஆணையத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்படி மொத்தம் 20,07,921 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் 9,80,880, பெண்கள் 10,26,914, மூன்றாம் பாலினத்தவா் 127 என பதிவாகியுள்ளது.

அக்டோபா் 13- ஆம் தேதி வரை நேரிடையாகவும், இணையதளத்தின் மூலமாகவும் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தற்போது 20,06,380 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் ஆண்கள் 9,80,062, பெண்கள் 10,26,188, மூன்றாம் பாலினத்தவா் 130 ஆக உள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com