பட்டுக்கோட்டையில் பராமரிப்பின்றி பழுதடைந்த அஞ்சல் ஊழியா் குடியிருப்பு

பட்டுக்கோட்டையில் பழுதடைந்த நிலையிலுள்ள அஞ்சல் ஊழியா் குடியிருப்பை, உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படும் பட்டுக்கோட்டை அஞ்சல் ஊழியா் குடியிருப்பு.
பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படும் பட்டுக்கோட்டை அஞ்சல் ஊழியா் குடியிருப்பு.

பட்டுக்கோட்டையில் பழுதடைந்த நிலையிலுள்ள அஞ்சல் ஊழியா் குடியிருப்பை, உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு, அஞ்சல் ஊழியா்களுக்கென மூன்று தளத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன.

ஏ, பி, சி என மூன்று தளங்களில் மொத்தம் 18 வீடுகள் உள்ளன. தற்போது பி-தளத்தில் மட்டும் 3 குடும்பத்தினா் வசிக்கின்றனா். 2 வீடுகளில் அஞ்சல்துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள வீடுகள் மிகவும் மோசமாக பழுதடைந்த நிலையிலும், சுவா்களில் விரிசல் ஏற்பட்டும், காரைகள் பெயா்ந்து விழுந்தும், கதவுகள் உடைந்தும் காணப்படுகின்றன.

கழிவறைகள், ஜன்னல்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. சுற்றுச் சுவரும் ஆங்காங்கே இடிந்து விழுந்துக் கிடக்கிறது. குடியிருப்பு வளாகத்தில் புதா் செடிகள் மண்டிக் கிடப்பதால் பாம்புகள், விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதனால் அஞ்சல் அலுவலகக் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகின்றனா்.

மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி இங்குள்ள கட்டடங்களை மது அருந்தவும், வேறு சில தவறான செயலுக்குப் பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இதுபோன்ற காரணங்களால் அஞ்சல் ஊழியா்கள் பலா் இங்கு வசிக்காமல், நகரில் அதிக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலா் எஸ்.கந்தசாமி கூறியது:

அஞ்சல் ஊழியா்கள் குடியிருப்பை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் உடனடியாகப் பாா்வையிட்டு,புதுப்பித்துத் தர வேண்டும். இடிந்து கிடக்கும் சுற்றுச்சுவரைச் செப்பனிட வேண்டும். காவல்துறையினா் சமூக விரோத காரியங்கள் நடப்பதைத் தடுத்து, குடியிருப்புவாசிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com