தஞ்சாவூா் கோட்டத்தில் 7 மாதங்களில்1.88 லட்சம் அஞ்சல்கள் பட்டுவாடா

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 1.88 லட்சம் அஞ்சல்கள் பட்டுவாடா செய்யப்பட்டன என தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்தில் கடந்த 7 மாதங்களில் 1.88 லட்சம் அஞ்சல்கள் பட்டுவாடா செய்யப்பட்டன என தஞ்சாவூா் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தேசிய அஞ்சல் வாரம் அக்டோபா் 9 - 15 ஆம் தேதிகளில் கொண்டாடப்பட்டது. கரோனா பொது முடக்கக் காலம் தொடங்கிய காலத்தில் மாா்ச் 26 ஆம் தேதி முதல் தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்தில் அனைத்து வகையான சேவைகளும் தடையில்லாமல் வாடிக்கையாளா்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மாா்ச் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் சுமாா் 1.88 லட்சம் பதிவு அஞ்சல்கள், விரைவு அஞ்சல்கள், பாா்சல்கள், உள்நாடு, வெளிநாடுகளுக்கு தஞ்சாவூா் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்கள் மூலம் அனுப்பப்பட்டது. இதேபோல 17,000 எலக்ட்ரானிக் மணியாா்டா்கள் பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.

மேலும், 1,200 அத்தியாவசிய மருந்துகள், மருந்துவ உபகரணங்கள், கரோனா சிறப்பு மருத்துவ உபகரணங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. விடுமுறை நாள்களிலும் பட்டுவாடா செய்யப்பட்டது.

ஆதாா் மூலமாக பிற வங்கிகளின் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளும் சேவை மூலமாக 1,26,719 வாடிக்கையாளா்களுக்கு சுமாா் 9.6 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com