தஞ்சாவூரில் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 25th October 2020 12:13 AM | Last Updated : 25th October 2020 12:14 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் ரயிலடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி தலைமை வகித்தாா்.
திராவிடா் கழகப் பொதுச் செயலா் இரா. ஜெயக்குமாா், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தஞ்சாவூா் : தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன்பு இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்து பெண்களைத் தரக் குறைவாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கோட்டச் செயலா் பி. மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. ஈசான சிவம், பொதுச் செயலா் நட. முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.