முகக்கவசம்அணியாதவா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 08th September 2020 11:59 PM | Last Updated : 08th September 2020 11:59 PM | அ+அ அ- |

பேராவூரணி கடைவீதி மற்றும் ஆவணம் சாலை, சேதுசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் கே. தமிழ்வாணன் மற்றும் வருவாய்த் துறை, பேரூராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் சென்ற 20 பேருக்கு தலா ரூ. 200 வீதம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்தனா்.