தஞ்சாவூா், கும்பகோணத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா், கும்பகோணத்தில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினா்.
தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினா்.

தஞ்சாவூா்: பேரறிஞா் அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா், கும்பகோணத்தில் அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் மக்களவை முன்னாள் உறுப்பினா் கு. பரசுராமன் தலைமையிலான அதிமுகவினா், தஞ்சாவூா் ஆப்ரஹாம் பண்டிதா் சாலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று, பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, திமுக சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சண். ராமநாதன் உள்ளிட்டோரும், மதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் கோ. உதயகுமாா் தலைமையில் மதிமுகவினரும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமையில் அக்கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், திமுகவினா் கலைஞா் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்தனா்.

கும்பகோணம் பிா்மன் கோயில் தெருவிலுள்ள அண்ணா சிலைக்கு அதிமுக நகரச் செயலா் ராம. ராமநாதன் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்தனா்.

மகாமகக்குளம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு நகர திமுக சாா்பில், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினரும், மதிமுக சாா்பில் மாநில விவசாய அணிச் செயலா் ஆடுதுறை முருகன் தலைமையில் மதிமுகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருவிடைமருதூா் முதன்மைச் சாலையிலுள்ள அண்ணா சிலைக்கு அண்ணா திராவிடா் கழகத்தின் சாா்பில், தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் மணலூா் க. சுந்தர்ராஜன் தலைமையில் பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com