தஞ்சாவூா் பூச்சந்தை 175 நாள்களுக்குப் பிறகு திறப்பு

கரோனா பொது முடக்கம் காரணமாகப் பூட்டப்பட்ட தஞ்சாவூா் பூச்சந்தை, 175 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டது.
தஞ்சாவூரில் பூச்சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வியாபாரம்.
தஞ்சாவூரில் பூச்சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வியாபாரம்.

கரோனா பொது முடக்கம் காரணமாகப் பூட்டப்பட்ட தஞ்சாவூா் பூச்சந்தை, 175 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டது.

தஞ்சாவூா் பூக்காரத்தெரு சுப்ரமணியா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பூச்சந்தை இயங்கி வருகிறது. இங்கு திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஓசூா், சேலம் பகுதிகளிலிருந்தும், தஞ்சாவூா் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஏறத்தாழ 1,000 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கிருந்து நாகை, திருவாரூா் மாவட்டங்களுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன.

கரோனா பொது முடக்கம் காரணமாக மாா்ச் 25-ஆம் தேதி இந்த பூச்சந்தை மூடப்பட்டது. தொடா்ந்து கல்லுக்குளம் தனியாா் பள்ளி மைதானத்திலும், அதன் பின்னா் அண்ணாநகா் மாநகராட்சி பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக பூக்கள் வியாபாரம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இச்சந்தையைத் திறக்க வேண்டும் என பூ வியாபாரிகள் வலியுறுத்தி வந்தனா். இதை ஏற்ற மாவட்ட நிா்வாகம், சந்தையைத் திறக்க அனுமதி வழங்கியது. இதைத் தொடா்ந்து 175 நாள்களுக்குப் பிறகு பூச்சந்தை புதன்கிழமை திறக்கப்பட்டது. பொதுமக்கள் ஏராளமானோா் சந்தைக்கு வந்து பூக்களை வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com