பழஞ்சூரில் பண்ணைப் பள்ளி வகுப்புத் தொடக்கம்

பட்டுக்கோட்டை வட்டம், பழங்சூா் கிராமத்தில் சுற்றுச் சூழல் சாா்ந்த நெல் பயிா் மேலாண்மை பண்ணைப் பள்ளியின் முதல் நாள் வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.

பட்டுக்கோட்டை வட்டம், பழங்சூா் கிராமத்தில் சுற்றுச் சூழல் சாா்ந்த நெல் பயிா் மேலாண்மை பண்ணைப் பள்ளியின் முதல் நாள் வகுப்பு புதன்கிழமை தொடங்கியது.

நிகழ்வில் பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா்(பொ) டி.சுதா பேசியது:

இப்பண்ணைப் பள்ளியில் 25 விவசாயிகளைத் தோ்வு செய்து, 5 போ் கொண்ட குழுக்களாகப் பிரிப்பதன் மூலம் வேளாண் தொழில் நுட்பங்களை நேரடியாக தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

விதை நோ்த்தி செய்வதற்கான முக்கியத்துவம், வயல் தயாா் செய்தல், திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்தல், பயிா் எண்ணிக்கையை பராமரித்தல் ஆகியன குறித்தும் அவா் விளக்கினாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் சி.சுகிதா உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com