விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேட்டில் ரூ. 72 கோடி மீட்பு: வேளாண் அமைச்சா் பேட்டி

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாகப் பெறப்பட்ட ரூ. 72 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றாா் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடாகப் பெறப்பட்ட ரூ. 72 கோடி மீட்கப்பட்டுள்ளது என்றாா் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்தது:

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் சில இடைத்தரகா்கள், இணையதள மையங்கள் மூலமாக சில முறைகேடுகள் நிகழ்ந்தன. இது கண்டறியப்பட்டு, இதுவரை ரூ. 72 கோடி மீட்கப்பட்டு, அரசு வங்கிக் கணக்கில் சோ்க்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா்கள், வேளாண் துறையைச் சாா்ந்தவா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து வருவாய்த் துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த வழக்குக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரின் துணையுடன் ரூ. 72 கோடியை வசூலித்திருக்கிறோம். தொடா்ந்து, தவறாகப் பெறப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

இதேபோல, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பலா் பணி நீக்கமும், கைதும் செய்யப்பட்டுள்ளனா். தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு களையப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களால் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது; அதனால்தான் இந்த மசோதாக்களை தமிழக அரசு ஆதரிக்கிறது என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com