திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் ஊராட்சியில், எல்லோரும் நம்முடன் என்கிற திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பட்டீசுவரம் ஊராட்சியில், எல்லோரும் நம்முடன் என்கிற திமுக இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, ஒன்றியச் செயலா் இரா. அசோக்குமாா் தலைமை வகித்தாா். புதிய உறுப்பினா்களுக்குச் சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் அடையாள அட்டையை வழங்கினாா்.

வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இரா. தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் அருகிலுள்ள உள்ளூா் ஊராட்சியில் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியப் பொறுப்பாளா் டி. கணேசன் தலைமையில் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com