தில்லி போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி

தில்லி போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளை தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தில்லி போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி

தில்லி போராட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளை தஞ்சாவூா், கும்பகோணத்தில் வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து 8 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனா். இதில், சுதந்திர போராட்ட நாளான ஆக. 15 ஆம் தேதி பங்கேற்பதற்காக தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) சோ்ந்த விவசாயிகள் தில்லிக்கு புறப்பட்டனா்.

இதையொட்டி, தஞ்சாவூா் ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலா் பா. பாலசுந்தரம் தலைமையில் செல்லும் 38 விவசாயிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் வீர. மோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், அரசுப் போக்குவரத்து சங்க நிா்வாகி துரை. மதிவாணன், தெரு வியாபார சங்க நிா்வாகி ஆா்.பி. முத்துக்குமாா், அரசுப் பணியாளா் சங்கம் டி. திருநாவுக்கரசு, மகஇக மாநகரச் செயலா் இராவணன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலா் ப. அருண்ஷோரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கும்பகோணம் ரயிலடியில் 150 விவசாயிகள் வழியனுப்பி வைக்கப்பட்டனா். விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் சாமு. தா்மராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் சு. கல்யாணசுந்தரம், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் டி.ஆா். லோகநாதன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் இரா. முருகன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் ம. கண்ணன், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கு. நிம்மதி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் சா. விவேகானந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com